வெள்ளி, 30 நவம்பர், 2018

திருமணநாள் வாழ்த்துக்கள்


இல்லத்தில் எப்போதும்
இதயம் சொல்வதை கேள் !

அறிவினை
அலுவலகத்தில்
வைத்துக்கொள் !

வாழ்க்கை வசந்தமாகும் !

என் இனிய திருமணநாள்
நல்வாழ்த்துகள் !

வியாழன், 29 நவம்பர், 2018

மாலை வணக்கம்

கதிரொளி
குறையும் நேரம்
மாலை - இளநிலவொளி
அரங்கேறும் !

வான்வெளி
எங்கும்
வைரங்கள்
மின்னும் !

தென்றல்
தடவிச் செல்லும்
நம் தேகங்கள்
சிலிர்க்கும் !

ஓசைகள் அந்நியமாகும்
உட்கார்ந்து ரசித்தால்
இரவின் பாசைகள்
எளிதாய் விளங்கும் !

காரிருள் சூழ்ந்ததும்
கதவடைத்துறங்குவது
எங்ஙனம் ?

இறைவன் தந்த
கொடையை
தடை செய்வது
எங்ஙனம் ?

இயற்க்கை
அழகை ரசி
பின் புசி !

வாழும்
வாழ்க்கை
அழகாகும் !


சனி, 24 நவம்பர், 2018

கவனம்

 

குழந்தைக்கு தெரியாது
ஒளிந்து விளையாடும் இடம்
இதுவல்ல - என்று !

வாகனம் ஒட்டியே 
கவனம் ! 
வண்டியை எடுக்கும் முன் !

ஒருவேளை 
ஒளிந்துகொண்டிருப்பது
உன் குழந்தையாக கூட
இருக்கலாம் ! 

செவ்வாய், 20 நவம்பர், 2018

பொங்கல் வாழ்த்துக்கள்

1.
மஞ்சளை பூசி , 
மாவிலை கோர்த்து
முக்கல்லை எடுத்து
முற்றத்தில் வைத்து 
ஆதவன் முன்னே 
ஏருழவனை எண்ணி
அன்னை வைத்திடும் பொங்கல் !!!


2. 
வெருப்புகள் மறைந்து
கரும்புகள் நிறைந்த 
தமிழர்கள் வீடு  - அது 
தை பொங்கல் என்றே பாடு !!!


3. 
உழைத்து களைத்த
உள்ளங்கள் அனைத்தும் 
இனிப்பை சுவைத்து
மகிழும் - நாளே 
பொங்கல் திருநாள் !!!



4.
தாம் ஏழையாக இருந்தாலும் 
பிற உயிர்களையும் 
தன்னைப்போல் - மதித்து
அரவணைத்து செல்லும் 
நாளே - பொங்கல் திருநாள் !!!



5.
உலகின் முதல் 
உழவரின் நண்பன் 
என் இனிய மாட்டுப்பொங்கல் 
நல்வாழ்த்துகள் !!!




6.
ஒளிகொடுத்து வழிகாட்டி
வாழவைக்கும் சூரியனுக்கு
நன்றி !!!




7.
வண்டிக்கு மட்டும் 
தோழ் கொடுக்காமல்
எங்கள் வாழ்க்கைக்கும் 
தோழ் கொடுத்த மாடுகளுக்கு 
நன்றி !!!



திங்கள், 19 நவம்பர், 2018

#Save_Delta


















பழிவாங்க
எலக்‌ஷன் இருக்கு !
இப்போ பல பிள்ளை
பசியோட இருக்கு !

சனி, 17 நவம்பர், 2018

என் கிராமம் முள்ளிக்குளம்


பறப்பதைப் பார்த்து 
அதிசயித்தோம் - கையில்
இருப்பதை எண்ணி
சிறகடித்தோம்

இன்டர்நெட் என்னடா
எங்க பாட்டி மேலடா 

ஜாதியும் , மதமும் 
தெரியாது - இங்கு 
வேலியும் , கேள்வியும் 
கிடையாது 

அந்நாள் தானே
சொர்க்கம்  - அது
கிராமத்தில் தானே
இருக்கும் 

பனைமரம் இருக்கு 
பலநாளா 
பசித்தால் , பறிப்போம்
என் தோழா

யாரு கேள்வி கேட்பது
எல்லோருக்கும் - செல்லம்
நாங்களே !

பெற்றோரிடம் கேட்பதுமில்லை
பெட்ரோல் போட தேவையுமில்லை
ஒரு நொங்கு வண்டி போதுமே
நூறு வண்டி ஆகுமா ?

ஏழை என்று 
நினைத்ததும் இல்லை
எதையும் பார்த்து
ஏங்கியதும் இல்லை 

கொட்டி கிடக்குது 
உன் மகிழ்ச்சி 
அது கிராமம் தானே 
சாட்சி !

செவ்வாய், 13 நவம்பர், 2018

திருமணநாள் வாழ்த்து


திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 

கடும் உழைப்புகளுக்கிடையில்
கிடைக்கும் ஒரு பத்துநிமிடம்
தேனீர் இடைவெளி 
சொர்க்கம் !






திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 

ஆண்டுக்கொரு முறை
தேவலோகம் சென்று 
திரும்பும் - ஞாபகங்கள் 
அதிசயம் !



















இல்லத்தில் எப்போதும்
இதயம் சொல்வதை கேள் !

அறிவினை
அலுவலகத்தில்
வைத்துக்கொள் !

வாழ்க்கை வசந்தமாகும் !

என் இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் ... !









வெள்ளி, 9 நவம்பர், 2018

எனை உலுக்கிய நிஜங்கள்















மழை ! 
மழை !! மழை !!!

பனங்கீற்றுக்கள்
குடை பிடித்துக்கொண்ட
குடும்பம் - சுவாசிக்கிறது
மழைக்கு நனையாமல் 

கணவன் மனைவி
மகளென்றும் ஓர் மாணவி
மகனென்றும் ஓர் பாலகன் 

சாணத்தால் அலங்கரிக்கப்பட்ட 
தரைதனில் காத்திருக்கிறது
மதிய உணவிற்கான தட்டுக்கள்.

இடுப்பினில் பாலகனோடு
எளிமையான குடும்பத்தலைவி 
மகளுக்கு சாதமிட ... 

காத்திருக்கிறான் கணவன் 
அவனுக்கு தட்டுக்கூட 
தரப்படவில்லை !

வெளியே ...
தொடங்கிய ஆட்டத்தை
முடிக்காமல் வெளுத்து வாங்கியது
மழை - இடி - மின்னல்

தானே எடுத்துக்கொண்டான்
தட்டினை - பொறுமையிழந்த
கணவன்

உடல் நடுங்க சிறிது மழைத்தளி
உடல் வாங்கியது - தனது
மேலாடை எனும் தோள் துண்டை 
வைத்து துடைத்துக்கொண்டே
மேலே பார்த்தான் ..

விளக்கி சொல்லியது 
அவன் நிலையை  
சிறிது
விலகியிருந்த பனங்கீற்று !!!

துள்ளி விழுந்த மழைத்துளி
அவனின் ஏழ்மையை 
எள்ளி நகைத்தது !!!

சிறிது இடமாறி
அமர்ந்தான் -ஆனல்
அவன் மனைவியின் மனம் 
மாறவில்லை 

பசி 
வெட்கம் மறைத்தது 
நீட்டிய தட்டுடன் 
மனைவியை பார்த்தான் .

அவளோ 
சிறிது மீன் துண்டை 
எடுத்து போட்டாள் - தன்
மகளின் தட்டினில் !!!

பின் கனீரென்ற 
சத்தம்போட்ட கரண்டி 
படுத்துக்கொண்டது
பாணைக்குள் !!!

உணவு
அவனுக்கு தரப்பட வில்லை 
வெளியே மழை
வயிற்றிற்குள் பசி !!!

பொறுமை இழந்தான்
மீண்டும் ஒரு முறை
வருவது வரட்டும் என
வெட்கமின்றி - பசியின்
கொடுமையால் கையை
வைத்தான் பானைக்குள் !!!

கொதித்தெழுந்தாள் மனைவி 
நொறுங்கிப்போனான்
"வேலைக்கு போக துப்பில்லை 
பணம் - சம்பாரிக்காத நீயெல்லாம்
ஒரு ஆம்பிள்ளை  
உனக்கு சோறு கேக்குதா ..? 
எடுறா கையை "!!!

மிரண்டு போனது 
அந்த ஏழை மீனவனின் வீடு 
அவனைப்போல்...!!!
அமைதியாக எழுந்தான் 

மானமிழந்தான்
தான் பெற்ற மகளின் முன்
மரியாதை இழந்தான் 

காரணம்...
தொடர் மழையால்
கடலுக்கு செல்லமுடியவில்லை
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டக்கூட
வழியில்லை !!!
இந்த பாழாய் போன வயிறு மட்டும்
சோறு கேட்கிறதே...

தாலி கட்டிய மனைவி
ஒரு வேளை சோற்றிற்க்கே
தரக்குறைவாய் பேசும்போது 
தான் வாழ்ந்தென்ன 
மாண்டென்ன ...?

பசியுடன் 
கொட்டும் மழைதனில்
நடந்து போனான் 
தோழில் துண்டோடு !!!

நீண்டநேரம் கழித்து
மின்னல் வெட்டும் 
அரையிருள் வெளிச்சத்தில் 
கதவு தட்டப்படும் ஓசை...

கண் விழித்தாள் , பின்
கதவினை திறந்தாள் தன்
காதல் மனைவி ...!!!

சொருகிப்போன கண்களுடன்
இடுப்பிற்க்கு மாறிப்போன
தோள் துண்டோடு காத்திருந்தான்
கணவன் !!!

"நான் உன் ஆம்பிள்ளை டீ
இந்தாடீ நீ கேட்ட பணம்" என
அள்ளி எரிந்தான் வீட்டிற்குள் !!!

" குடிச்சிருக்கியா ... 
அட பாவி மனுசா,
நீ திருந்தமாட்டே...
ஏதுய்யா இவ்வளவு பணம் ..." ? என
இடுப்பை தொட்டாள்,

அலறினான்
அவன் இடுப்புத்துண்டை
அவிழ்த்தவள் 
அலறித்தான் போனாள் !!!

தோழ் கொடுப்பான்
தோழன் -எப்போதும்
ஏழை தோழில் இருக்கும்
மேல்துண்டு !!!

ஆம்
அவனின் மானம் காத்த
தோழன் - அந்த மேல்துண்டு
அவனின் இடுப்பு காயத்தை
தாங்கி நிற்கிறது 

ஏழை உயிர் வாழ
போதும் ஒரு கிட்னி !!!

நன்றி

புதன், 7 நவம்பர், 2018

சுந்தரபாண்டிபுரம் - நெல்லை


மரங்கள் அழைத்த 
விருந்திற்க்கு வந்திருந்த 
மேக கூட்டங்கள்
மனமுவந்து தந்த
பரிசுகளை
மழையாய் பொழிவதும்...

முத்து முத்தாக
பொழிந்த மழைதனில்
சொட்டு சொட்டாக
சேர்ந்த நீர் கூட்டங்களில்
வந்தமர்ந்து மகிழும்
பறவையினங்களும்...

பூவினங்கள் தன்
மதுரங்களை கூடிமகிழும்
வண்டுகளுக்கு
தாரை வார்ப்பதும்...

மதுவுண்ட வண்டினங்கள்
மதிமயங்கி
மலர்விட்டு மலர் தாவி
மனம் குதுகழிப்பதும்...

விதைகளுக்குள் மறைந்திருந்த
விருட்சங்கள்
வளர்ந்து
செடி கொடிகளாய்
படர்வதும்...

தென்பொதிகை
தென்றலின்
இன்னிசையில் 
மகிழ்ந்தாடும் 
பறவையினங்கள்
தானாடி மகிழ்வதும்...

எங்கே போகிறோம் 
என தெரியாமல்
சுதந்திரமாய் 
சிறகடித்து பறக்கும்
சின்னஞ்சிறு 
பட்டாம்பூச்சிகள்
பறந்து திரிவதும்...

கொட்டி கிடக்கும்
இயற்க்கை அழகினை
கட்டிக்காத்திடும் 
நல் மக்கள் நிறைந்ததும் ...

குட்டி கோடம்பாக்கம் 
என்னும் நெல்லை
சுந்தரபாண்டியாபுரம்.

நன்றி

காலை வணக்கம்


வேண்டுகோள்


உயிரற்ற சொத்துக்களை நேசித்து 
உயிருள்ள பெற்றோர்களை
உபயோகித்து
உதாசீன படுத்தாதீர்கள்.


காலை வணக்கம்


நம்பிக்கை எனும் 
தூண்டுதல் இருக்குமானால்
அணையும் விளக்கு கூட
பிரகாசமாகும்.






பணம்












எந்த ஒரு கொடிய நோய்க்கும்
முதலில் தேவைப்படுவது
மருந்து அல்ல ...

பணம் தான் .

தாய்மை






பிறர்க்காக குலை தள்ளும் வாழையும் 
தனக்கென வைத்துக்கொள்ளாத தாயும் 
இருக்கின்ற வரையில் அன்பெனும் மழை
பொழிந்துகொண்டே இருக்கும் - அதில் 
ஆயிரம் செடிகள் பூத்துக்கொண்டே இருக்கும் !


மழலை



மலரிதழ் பாதங்கள்
மண்தொடும் முன்னே - என்
முடிசூழ் நெஞ்சமுனக்கு
முதல்படியானதடா !

மடக்கிய விரல்கொண்டு
மட்டி வாய்க்குள் வைத்து
நின் பொக்கைவாய் சிரிப்பினில்
என் கவலை மறந்தேனடா !

ஒருமொழி தவிர
மறுமொழி தெரியாதவளை
உன்மொழி கற்கவைத்தது
அதிசயமடா !

ஆணென்று உயர்த்திய
என்னை - அப்பா என்று
அழைத்திடும் நாளுக்காய்
காத்திருந்தேனடா !

எங்கள் கவலை தீர்த்தாயடா
என் அன்பு மகனே.

சமூகம்


காலை வணக்கம்













வேண்டுகோள்



தன்னம்பிக்கை







தனக்கு மட்டும்தான் துன்பம் என்பது
     தரணியில் யாருக்கும் இல்லை
எதிர்த்து நடைபோட்டால் - இமயம் கூட
    எழுந்து வழி கொடுக்கும்.

ஆசிரியர் தின வாழ்த்து









தீபாவளி வாழ்த்து



என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்


திருமணநாள் வாழ்த்துக்கள்

இல்லத்தில் எப்போதும் இதயம் சொல்வதை கேள் ! அறிவினை அலுவலகத்தில் வைத்துக்கொள் ! வாழ்க்கை வசந்தமாகும் ! என் இனிய திருமணநாள் நல்வா...