மழை !
மழை !! மழை !!!
பனங்கீற்றுக்கள்
குடை பிடித்துக்கொண்ட
குடும்பம் - சுவாசிக்கிறது
மழைக்கு நனையாமல்
கணவன் மனைவி
மகளென்றும் ஓர் மாணவி
மகனென்றும் ஓர் பாலகன்
சாணத்தால் அலங்கரிக்கப்பட்ட
தரைதனில் காத்திருக்கிறது
மதிய உணவிற்கான தட்டுக்கள்.
இடுப்பினில் பாலகனோடு
எளிமையான குடும்பத்தலைவி
மகளுக்கு சாதமிட ...
காத்திருக்கிறான் கணவன்
அவனுக்கு தட்டுக்கூட
தரப்படவில்லை !
வெளியே ...
தொடங்கிய ஆட்டத்தை
முடிக்காமல் வெளுத்து வாங்கியது
மழை - இடி - மின்னல்
தானே எடுத்துக்கொண்டான்
தட்டினை - பொறுமையிழந்த
கணவன்
உடல் நடுங்க சிறிது மழைத்தளி
உடல் வாங்கியது - தனது
மேலாடை எனும் தோள் துண்டை
வைத்து துடைத்துக்கொண்டே
மேலே பார்த்தான் ..
விளக்கி சொல்லியது
அவன் நிலையை
சிறிது
விலகியிருந்த பனங்கீற்று !!!
துள்ளி விழுந்த மழைத்துளி
அவனின் ஏழ்மையை
எள்ளி நகைத்தது !!!
சிறிது இடமாறி
அமர்ந்தான் -ஆனல்
அவன் மனைவியின் மனம்
மாறவில்லை
பசி
வெட்கம் மறைத்தது
நீட்டிய தட்டுடன்
மனைவியை பார்த்தான் .
அவளோ
சிறிது மீன் துண்டை
எடுத்து போட்டாள் - தன்
மகளின் தட்டினில் !!!
பின் கனீரென்ற
சத்தம்போட்ட கரண்டி
படுத்துக்கொண்டது
பாணைக்குள் !!!
உணவு
அவனுக்கு தரப்பட வில்லை
வெளியே மழை
வயிற்றிற்குள் பசி !!!
பொறுமை இழந்தான்
மீண்டும் ஒரு முறை
வருவது வரட்டும் என
வெட்கமின்றி - பசியின்
கொடுமையால் கையை
வைத்தான் பானைக்குள் !!!
கொதித்தெழுந்தாள் மனைவி
நொறுங்கிப்போனான்
"வேலைக்கு போக துப்பில்லை
பணம் - சம்பாரிக்காத நீயெல்லாம்
ஒரு ஆம்பிள்ளை
உனக்கு சோறு கேக்குதா ..?
எடுறா கையை "!!!
மிரண்டு போனது
அந்த ஏழை மீனவனின் வீடு
அவனைப்போல்...!!!
அமைதியாக எழுந்தான்
மானமிழந்தான்
தான் பெற்ற மகளின் முன்
மரியாதை இழந்தான்
காரணம்...
தொடர் மழையால்
கடலுக்கு செல்லமுடியவில்லை
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டக்கூட
வழியில்லை !!!
இந்த பாழாய் போன வயிறு மட்டும்
சோறு கேட்கிறதே...
தாலி கட்டிய மனைவி
ஒரு வேளை சோற்றிற்க்கே
தரக்குறைவாய் பேசும்போது
தான் வாழ்ந்தென்ன
மாண்டென்ன ...?
பசியுடன்
கொட்டும் மழைதனில்
நடந்து போனான்
தோழில் துண்டோடு !!!
நீண்டநேரம் கழித்து
மின்னல் வெட்டும்
அரையிருள் வெளிச்சத்தில்
கதவு தட்டப்படும் ஓசை...
கண் விழித்தாள் , பின்
கதவினை திறந்தாள் தன்
காதல் மனைவி ...!!!
சொருகிப்போன கண்களுடன்
இடுப்பிற்க்கு மாறிப்போன
தோள் துண்டோடு காத்திருந்தான்
கணவன் !!!
"நான் உன் ஆம்பிள்ளை டீ
இந்தாடீ நீ கேட்ட பணம்" என
அள்ளி எரிந்தான் வீட்டிற்குள் !!!
" குடிச்சிருக்கியா ...
அட பாவி மனுசா,
நீ திருந்தமாட்டே...
ஏதுய்யா இவ்வளவு பணம் ..." ? என
இடுப்பை தொட்டாள்,
அலறினான்
அவன் இடுப்புத்துண்டை
அவிழ்த்தவள்
அலறித்தான் போனாள் !!!
தோழ் கொடுப்பான்
தோழன் -எப்போதும்
ஏழை தோழில் இருக்கும்
மேல்துண்டு !!!
ஆம்
அவனின் மானம் காத்த
தோழன் - அந்த மேல்துண்டு
அவனின் இடுப்பு காயத்தை
தாங்கி நிற்கிறது
ஏழை உயிர் வாழ
போதும் ஒரு கிட்னி !!!
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக